12th of August 2014
சென்னை:முண்டாசுப்பட்டி’யில் முனீஸ்காந்தாக காமெடியில் அதகளம் பண்ணிய ராம்தாஸை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..? சொல்லப்போனால் அந்தபடத்தில் விஷ்ணு, காளி வெங்கட் இருவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது இவரது நடிப்பு.. அதனாலேயே படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி கூட இவரது நடிப்பை பாராட்டினார்.
இப்போது ஒரு படி முன்னேறி விக்ரமின் நண்பராக மாறியிருக்கிறார் ராம்தாஸ். ஆம்.. விஜய்மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமின் நண்பராக படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடிக்கிறார் ராமதாஸ்.
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இவரது கேரக்டர் கூட முண்டாசுப்பட்டி படத்தின் தொடர்ச்சியாகவே பின்னப்பட்டுள்ளதாம். அதாவது முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த்தின் மகனாக இந்தப்படத்தில் நடிக்கிறார் ராம்தாஸ். அதை நினைவூட்டும் விதமாக ‘என்னோட அப்பா என்னை முன்னுக்கு கொண்டுவரணும் அப்படிங்கிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டார்.. அதுக்காக டெட் பாடியாகக்கூட ஒரு படத்தில் நடிச்சார்..” என்பது மாதிரியான வசனங்களும் படத்தில் இடம்பெறுகிறதாம்..
Comments
Post a Comment