21st of August 2014
சென்னை:தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை தொட்டுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப்பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் வலம்வந்தவர்.
தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய 47 நாட்கள் படத்தில் அறிமுகமான சிரஞ்சீவி மேலும் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கியதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார் சிரஞ்சீவி.
இருந்தாலும் மீண்டும் சினிமாவில் நுழையும் விதமாக தற்போது தனது 150வது படத்தில் நடிக்கும் வேளைகளில் எட்பட்டிருக்கிறார். இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நமது Poonththalir-Kollywood தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது
Comments
Post a Comment