8th of August 2014
சென்னை:ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றால் இப்போது எல்லோரும் இனியாவைத்தான்
தேடுகிறார்கள். ரிஷா, மைனா நாகு ஆகியோருக்கு போட்டியாக இனியாவும் குத்தாட்ட
களத்தில் இறங்கி விட்டார். ரெண்டாவது படம், திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு
ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் ஆட்டம் போட்டிருக்கிறார் இனியா கை வசம் இரண்டு
படங்கள் வேறு இருக்கிறது. ஹீரோயின் வாய்ப்பு குறைந்து விட்டதால்தான் ஒரு
பாட்டுக்கு ஆடிவருவதாக கூறப்படுவதை இனியா மறுக்கிறார்.
இதுபற்றி
அவர் கூறியிருப்பதாவது: வேளச்சேரி படத்தில் சரத்குமார் சாருக்கு ஜோடியாக
நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு நடந்து
வருகிறது. மலையாளத்தில் மோகன்லால் சாருடன் நடித்து வருகிறேன். அப்படி
இருக்கும்போது ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் ஆடுவதாகவும், பணத்துக்காக
ஆடுவதாகவும் கூறுவது தவறு.
பார்த்திபன் சார் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஹீரோ, ஹீரோயின்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். நான் ஆடினது தப்பா?.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனன் பாடிய பாட்டு ஸ்பெஷலாக இருந்ததால் ஆடுகிறேன். இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஒரு பாட்டுக்கு ஆடுவது என் இமேஜை உயர்த்துமே தவிர ஒரு போதும் குறைக்காது. என்கிறார் இனியா.
Comments
Post a Comment