ஷங்கர், விக்ரம் கூட்டணி அமைத்துள்ள ஐ’ அதிரடி ரிலீஸ் ப்ளான்!!!

25th of August 2014
சென்னை:ஷங்கர், விக்ரம் கூட்டணி அமைத்துள்ள பிரம்மாண்ட படமான ‘ஐ’ எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! வரும் அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி புதன் கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22-ஆம் தேதி ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
அதற்கு முன்னதாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதி ‘ஐ’ படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் ஒரு சில ஹாலிவுட் பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
‘ஐ’ படத்தில் விக்ரமுடன் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, ராம்குமார் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்க, ஷங்கரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ‘ஐ’ படத்தை தயாரித்திருக்கும் ’ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

Comments