17th of August 2014
சென்னை:தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் ஷங்கர் தான். தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டுபோக வேண்டும் என 365 நாட்களும் யோசித்து அதன்படி செயலாற்றி வருபவர் இயக்குனர் ஷங்கர். இல்லையென்றால் ரஜினியை வைத்து சிவாஜி படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தையும் ரஜினியை வைத்தே இயக்க முடியுமா?

ஜென்டில்மேன் படத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஷங்கர், அதையடுத்து இந்தியன், முதல்வன், அந்நியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன் என ஒவ்வொரு படங்களையுமே ஒவ்வொருவிதமான பிரமாண்டங்களுடன் தந்திருந்தார். அதுமட்டுமல்ல தனது சாதனையை அவரே தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தனது பிரமாண்டத்தால் முறியடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், தற்போது விக்ரமை வைத்து இயக்கி வரும் ‘ஐ’ படத்தில் இதுவரை தனது படங்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்டத்தை புகுத்தியுள்ளார் ஷங்கர். இன்று ஷங்கரின் 51வது பிறந்தநாள். ஷங்கர் நீண்டநாட்கள் நலமுடன் வாழ நமது poonththalir-kollywood தன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment