இங்கிலாந்து பத்திரிகையில் இடம் பிடித்த வெங்கட் பிரபு படம்!!!

24th of August 2014
சென்னை:சென்னை 600028’ படத்தின் மூலம் இயக்குநரானவர் வெங்கட் பிரபு, அதற்கு முன்பு சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து வந்தார். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து அவர் இயக்கிய முதல் படமான ‘சென்னை 600028’ கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம், ரிலீஸிற்குப் பிறகு தமிழ் சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. வசூல் ரீதியாகவும் விருதுகள் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் மூலம் வெங்கட் பிரபு முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு உலக அளவில் கெளரவம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் வெளிவரும் முன்னணி நாளிதழ் ஒன்று, உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ படமும் இடம் பிடித்துள்ளது.

Comments