அஞ்சானுக்கு அஞ்சாத ‘புதுமைப்பித்தன்’!!!

8th of August 2014
சென்னை:தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதியே வெளியிடுகிறார் பார்த்திபன். முதலில் ஆகஸ்ட்-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்தவர் ‘சரபம்’, ‘ஜிகர்தண்டா’ ரிலீஸுக்காக வழிவிட்டு ஒதுங்கினார்.. 
 
அதற்கடுத்து ஆகஸ்ட்-29க்கு ரிலீசை மாற்றிவைத்தார்.. சூர்யாவின் ‘அஞ்சான்’ ஆகஸ்ட்-15ல் ரிலீஸாகி இரண்டுவாரம் ருத்ர தாண்டவம் ஆடும். அதில் சிக்கிக்கொள்ள வேண்டாமே என முடிவு செய்ததுதான் அதற்கு காரணம்.. ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றி திடீரென அஞ்சானுக்கு போட்டியாக களத்தில் குதிக்க கரணம் என்ன..?
 
நேற்று நடைபெற்ற ‘சிகரம் தொடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அதற்கான காரணத்தையும் சொன்னார் பார்த்திபன்.. “இரண்டு தினங்களுக்கு முன் ஒரு இடத்தில் ஒரு மனிதரை சந்தித்தேன்.. உங்கள் படத்தையெல்லாம் விடாமல் பார்த்துவிடுவேன் சார்.. உங்க ரசிகன் நான் என்று சொன்னவர் ஆமா இப்ப என்ன படம் நடிக்கிறீங்க.. எப ரிலீஸ் ஆகுதுன்னு கேட்டதும் எனக்கு பகீர்னுச்சு.. நம்ம படம் எது, அது எப்ப ரிலீசாகுதுங்குற விஷயம் கூட இன்னும் பலரை சரியா ரீச் பண்ணலையோன்னு டவுட் வந்துச்சு. அதனால் தான் ரிலீஸை சூர்யாவோட ‘அஞ்சான்’ வெளியாகுற தேதிக்கு மாத்திட்டேன்..
 
இதனால நான் சூர்யாவுக்கு எதிரா வேணுமுன்னே களத்துல குதிக்கிறதா நினைக்காதீங்க. அது எதுக்காகன்னா, என்னோட முதல் படம் ‘புதிய பாதை’ ரிலீசாகிறப்ப கமல் நடிச்ச ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அப்ப நான் என்ன பன்னுனேன்னா கமல் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க அப்படியே என் படத்துக்கு வாங்கன்னு விளம்பரம் பண்ணுனேன்.. அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு.. அதுக்கப்புறம் மவுத் டாக்கில பிக்கப் ஆகிருச்சு.
 
எப்படி யானைக்கு ஒரு கவளம் உணவு கொடுக்கிறப்ப அதுல சிந்துற ஒரு சில துளி உணவுப்பொருள் பல எறும்புகளுக்கு உணவாகுதோ அந்த மாதிரிதான் சூர்யா படத்தோட ரிலீஸ் ஆகுறப்ப விளம்பரம் கிடைக்கிறதோட அவர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க அப்படியே என் படத்துக்கு வரட்டுமேங்கிற  ஒரு வகையான வியாபார யுக்திதான் காரணம்” என முழு நீள விளக்கம் அளித்தார் பார்த்திபன். இருந்தாலும் விஜய்சேதுபதி, ஆர்யா, அமலாபால் இவங்கல்லாம் இருக்கிறதால பார்த்திபன் படத்துக்குன்னே தனியா கூட்டம் வர்றதுக்கே நிறைய வாய்ய்பு இருக்கே.. அதனால் பார்த்திபன் கவலைப்படவே தேவையில்லை.

Comments