ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி: ஹன்சிகா!!!

21st of August 2014சென்னை:ஹன்சிகா என்றாலே ஜாலியான நடிகை. கண்களுக்கு குளிர்ச்சியான நடிகை என்றுதான் நினைக்கிறார்கள். அதனால்தான் காரசாரமான வேடத்தை அவருக்கு கொடுத்து கடுமையான நடிப்பை அவரிடமிருந்து வெளியே கொண்டு வர யாரும் நினைப்பதில்லை. ஆனால், 'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தில் ஹன்சிகாவை வழக்கம்போலவே நடிக்க வைத்த சுந்தர்.சி., ''அரண்மனை'' படத்தில் அவரை அதிரடியான நடிகையாக்கியிருக்கிறார்.
 
இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், எந்த நடிகையாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரே மாதிரியில்லாமல் மாறுபட்ட வேடங்களை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் இருக்கும் வெவ்வேறு திறமைகள் வெளிப்படும். அந்த வகையில், ஹன்சிகா என்றாலே மாடர்ன் கேரக்டர்களுக்கு மட்டுமே செட்டாவார் என்று அனைவரும் முடிவு செய்திருக்க, சுந்தர். சி மட்டும், என்னை மாற்று கோணத்தில் யோசித்தார்.
 
அதனால்தான் அரண்மனை படத்தில் ஜோதிகா, அனுஷ்கா போன்ற நடிகைகள் மட்டுமே நடிக்க முடியும் என்று நினைக்கும் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார். ஒரே மாதிரயாக தொடர்ந்து நடித்து போரடித்து விட்ட எனக்கும், இந்த மாதிரி வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மனதளவில் இருந்ததால் அந்த வாய்ப்பினை நன்றாக யூஸ் பண்ணியிருக்கிறேன்.
 
அந்தவகையில், இப்படம் திரைக்கு வந்தால் இந்த ஹன்சிகாவின் இன்னொரு முகம் தெரியும். அது அதிரடியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும். அதனால் அரண்மனை வெளியான பிறகு எனது சினிமா கேரியரே டோட்டலாக மாறி விடும் என்கிறார் ஹன்சிகா.

Comments