விநாயகர் சதுர்த்தியன்று அஜித்தின் புதுபட தலைப்பு அறிவிப்பு!!!

21st of August 2014
சென்னை:சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்களுக்கு தலைப்பு என்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது. முழு படமும் முடிந்த பிறகுதான் தலைப்பே வைக்கப்படுகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்திற்கும் தலைப்பு வைப்பதில் பெரும் காலதாமதமானது.

இந்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இன்னும் தலைப்பு வைக்க வில்லை, ஊடகங்களில் பல்வேறு தலைப்புகள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பையும் அறிவிக்கவில்லை.

அதின் 55வது படமான இப்படம் தற்போது முடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. இது அஜித் ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. இதனால் படத்தின் தலைப்பை அதிகார்பூர்வமாக வரும் விநாயகர் சதுர்த்தியன்று அறிவிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், இதே நாளில் படத்தின் ஃபஸ்ட் லுக் டீசரையும் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments