ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு கமல் இரங்கல்!!!

13th of August 2014
சென்னை:ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவருமான ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ‘நைட் அட் தி மியூஸியம்’, ‘ஜூமான்ஜி’, ‘ரோபோட்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.

தனது நகைச்சுவை உணர்வுமிக்க நடிப்பாற்றலாலும், கதாபாத்திரங்களாலும் ரசிகர்களை மகிழ்வித்த அவரது மறைவுக்கு உலக நாயகன் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.. அதில் “நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கல் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரு வேடிக்கையான தோற்றத்தை தக்கவைப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு உடனடியாக கண்ணீரை வரவைப்பது. 
 
ஆண்கள் அழுவதற்கு மரியாதை கொண்டுவந்தது ராபின் வில்லியம்ஸ். அவருடைய திறமையால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தற்கொலை செய்து இறந்தாரென்பது உண்மையென்றால், அவர் அவரது வாழ்க்கையை முடிவடையும் தேதிக்கு முன்பே முடித்துகொண்டதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இத்தகைய தகுதி, திறமை வாய்ந்த ஒரு கலைஞரிடமிருந்து, பொறுப்பை தட்டிக்கழிக்கும் செய்கையை எதிர்பார்க்கவில்லை. இது எனது இந்திய ஜாம்பவானான குரு தத்திற்கும் பொருந்தும்’ என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கமல்.

Comments