30th of August 2014
சென்னை:நல்ல கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருபவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் ஃபிலிம்ஸ் சி.வி.குமார். அதற்காக நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வேறு மொழியில் இருந்தால் அதை ரீமேக் செய்யும் வாய்ப்பையும் அவர் தவற விடுவதாக இல்லை.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘லூசியா’ என்ற படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் சி.வி.குமார். இந்தப்படத்திற்கு ‘enakkulஎனக்குள் ஒருவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. கமல் பட டைட்டில் தான்.. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து முறைப்படி இந்த டைட்டிலை வாங்கிவிட்டார் சி.வி.குமார்.
ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த். கன்னடத்தில் இந்தப்படம் வெளியானபோதே படத்தைப் பார்த்த சித்தார்த் அப்போதே இயக்குனர் பவன் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் சித்தார்த்தை இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் தூண்டியுள்ளது. தமிழில் இந்தப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனரான பிரசாத் மாறார்.. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Comments
Post a Comment