திரையுலகம் திறமையானவர்களுக்கு மதிப்பு கொடுக்கும், ஆனால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்: அனுஷ்கா!!!

21st of August 2014
சென்னை:இன்றைய தேதியில் அட்டகாசமான உயரத்துடன், அழகாக இருக்கும் நடிகைகளில் அனுஷ்காவும் முக்கியமானவர். அனுஷ்கா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முப்பது வயதைக் கடந்தாலும் முன்னணியில் இருக்கிறார். எந்தவிதமான உடைகளிலும் பொருத்தமாக இருப்பது இவருக்கு ஒரு மிகப் பெரிய பிளஸ் பாயின்ட். ஆரம்பத்தில் யோகா பயிற்சியாளராக இருந்தவர் நாகார்ஜுனாவின் அறிமுகத்தால் 2005ம் ஆண்டில் 'சூப்பர்' என்ற தெலுங்கப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாகவே இருக்கிறார்.
 
தனக்கும் ஆரம்ப காலத்தில் சில தடங்கல்கள் இருந்ததாகவும் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் இருந்ததாலேயே இந்த அளவிற்கு முன்னணிக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார் அனுஷ்கா. “முதல் படமான 'சூப்பர்' படத்தில் நடிக்கும் போது படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். அதன் பின் இரண்டாவது படத்தில் நடித்த போது பல தடங்கல்கள் வந்தன. அதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று கூட நினைத்தேன். அப்படி திரும்ப வந்திருந்தால் என்னை மறந்து போயிருப்பார்கள். ஆனாலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து நடித்தேன். இம்மாதிரியான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.

திரையுலகம் திறமையானவர்களுக்கு மதிப்பு கொடுக்கும், ஆனால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இங்கு புதுமுகங்களுக்கு யாரும் ரெட் கார்ப்பெட் வரவேற்பு கொடுப்பதில்லை. அதனால், அவமானங்களையும் தாங்கிக் கொள்ளும் வலிமையுடன் இருக்க வேண்டும்,” என்று சொல்கிறார்.

Comments