மீண்டும் ஒரு ஆண்குழந்தைக்கு அப்பாவானார் ஜெயம்ரவி!!!

11th of August 2014
சென்னை:ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்காக சுராஜ் டைரக்ஷனில் தற்போது தான் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, இரண்டு நாட்களாக தனது மனைவியுடன் கூடவே இருந்து கவனித்துக்கொண்டார் ஜெயம் ரவி.
 
இது இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாகும்.. ஏற்கனவே இரண்டு வயதில் ஆரவ் என்கிற பையன் இருக்கிறான். தாயும் சேயும் நலமாக உள்ளதால் ஜெயம் ரவி இன்றிலிருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். “நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.. எனக்காக படப்பிடிப்பை தள்ளிவைத்த எனது தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் ஜெயம் ரவி..!

Comments