ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், ‘வை ராஜா வை’ படத்தின் தனுஷ் வரிகளுக்கு இளையராஜாவின் குரல்!!!

1st of August 2014
சென்னை:ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், ‘வை ராஜா வை’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
 
இந்தப் படத்திற்காக யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். ‘3’ படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தை ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்க,
 
இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

Comments