பெண் போலீசை தூக்கிக்கொண்டு நடனம் ஆடிய ஷாருக்கானுக்கு எதிர்ப்பு!!!

11th of August 2014
சென்னை:மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது, சில இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடிய ஷாருக் கான், மேடை ஓரமாக ஓடி வந்து, அங்கு பந்தோபஸ்த்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போலீஸை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் போலீஸ் சீருடையை அவமதிக்கும் விதமாக உள்ளது. அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்து போலீஸ் சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு பொது நிகழ்ச்சி இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
 

Comments