5th of August 2014
சென்னை:Tags : Aayirathil Iruvar Media Meet Stills, Aayirathil Iruvar Press Meet Gallery Pics, Aayirathil Iruvar Press Meet images, Ayirathil Iruvar Team Meet Media Peoples Pictures, Aayirathil Iruvar Press Meet Event Photos.
காதல் மன்னன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அமர்க்களமான என்ட்ரி கொடுத்து, தொடர்ந்து அட்டகாசமான படங்களை ஜேஜே என இயக்கி, இயக்குனர்களில் வசூல் ராஜாவாக திகழ்ந்தவர் தான் இயக்குனர் சரண்.. 2009ல் வெளியான ‘மோதி விளையாடு’ படத்திற்குப்பின் ஐந்து வருட இடைவெளி கழித்து ‘ஆயிரத்தில் இருவர்’ படம் மூலமாக சினிமா ரேஸில் மீண்டும் நுழைகிறார்.

அதுமட்டுமல்ல சரணுடன் ஆரம்பகாலத்தில் இருந்து இணைந்து பயணித்து அவரது படங்களில் ரசிகர்களை துள்ளாட்டாம் போடவைக்கும் பாடல்களை கொடுத்துவந்த இசையமைப்பாளர் பரத்வாஜும் மீண்டும் இவருடன் இணைந்துள்ளார். காரணம் இடையில் இவர்கள் சற்று பிரிந்ததால் ‘மோதி விளையாடு’ படத்திற்கு இசையமைத்தவர் ஹரிஹரன்.
மோதி விளையாடு’ படத்தில் ஹீரோவாக நடித்த வினய் தான் தற்போது இவர் இயக்கியுள்ள‘ஆயிரத்தில் இருவர்’ படத்திலும் கதாநாயகன். அதிலும் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. கதாநாயகிகளாக சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா ஆகியோர் நடிக்கிறார்கள். விவேக்குடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த காஜல் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..
இந்தப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் கதாநாயகிகள் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஆச்சர்யமான, ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சரணின் முதல் பட கதாநாயகியான மானு இந்த விழாவிற்கு வந்திருந்து இந்த மூன்று நடிகைகளையும் அறிமுகப்படுத்தியதுதான். இந்த விழாவிற்கு வந்திருந்த படக்குழுவினரை இயக்குனர் சரண் அறிமுகப்படுத்தி வரவேற்று பேசியதே சுவையானதாக இருந்தது.
Comments
Post a Comment