Anjaan Press Show Photos!!! அஞ்சான் பிரஸ் ஷோ - படங்கள்!!!

18th of August 2014
சென்னை:Tags : Surya in Anjaan Movie Specail Show Gallery, Anjaan Movie Team at Premiere Show Event Stills, Anjaan Movie Celebrities Show Photos, Anjaan Press Show Pictures, Anjaan Film Specail Screening images.

சுதந்திர தினத்தன்று வெளியான அஞ்சான் படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது.

இதற்கு முந்தைய எனது படங்களை விட அஞ்சான் அதிக வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பைரசி வந்து விடக்கூடாது என்பதற்காக 1500 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம். தமிழ் நாட்டில் 400 தியேட்டர்கள், ஆந்திராவில் 600 தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கிறது.

கேரளாவில் மம்முட்டி மோகன்லால் தியேட்டர்களை விட அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம். எல்லாமே பாசிட்டிவாக இருக்கும்போது சிலர் மட்டும் படத்தை பற்றி நெகட்டிவிட்டியை (எதிர்மறை) பரப்பியிருக்கிறார்கள். இது ரொம்ப தவறு. அது தடுக்கப்பட வேண்டும். படத்தை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கு. என்னை சுற்றி வேலி போட்டால்தான் நானும் சரியான பாதையில் பயணம் செய்ய முடியும்.

ஆனால் பாதையில் முள்ளை போட்டால் என்ன செய்ய முடியும். சினிமாவையே புரட்டி போடுற படம் எடுத்திருக்கோம். யாருமே எடுக்காததை எடுத்திருக்கோம் என்றெல்லாம் சொல்லவில்லை. மக்களை சந்தோஷப்படுத்த படம் எடுத்திருக்கோம். முடிஞ்சா பாராட்டுங்க. காயப்படுத்தாதீங்க. என்றார்.

 














Tags : Surya in Anjaan Movie Specail Show Gallery, Anjaan Movie Team at Premiere Show Event Stills, Anjaan Movie Celebrities Show Photos, Anjaan Press Show Pictures, Anjaan Film Specail Screening images

Comments