9th of August 2014சென்னை:Tags : Hansika Birthday Celebration Images, Hansika Birthday Celebration Gallery, Hansika Birthday Celebration Stills, Hansika Birthday Celebration Pictures.
இன்று (ஆகஸ்ட் 9) நடிகை ஹன்சிகாவுக்குப் பிறந்தநாள். கேக் வெட்டி, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு ஓய்ந்துபோவதில்லை ஹன்சிகாவின் ஒவ்வொரு வருடப் பிறந்தநாளும். அதையெல்லாம் தாண்டி தனித்தன்மை வாய்ந்தவை அவரின் பிறந்நாள்கள். ஒவ்வொரு வருட பிறந்தநாளின்போது தன்னால் முடிந்த அளவு குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னையாக மாறியிருக்கிறார் ஹன்சிகா.
இந்த வருடப் பிறந்தநாளுக்கும் 5 குழந்தைகளை அவர் தத்தெடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இந்த குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வியையும் கூட ஹன்சிகா தன் சொந்த செலவில் செய்து கொடுத்து வருகிறாராம். இதற்காக ‘ஹன்சிகா குழந்தைகள் அறக்கட்டளை’ என்ற அமைப்பையும் அவர் துவங்கியிருக்கிறாராம்.
அதோடு ஓவியம் வரைவதிலும் சிறந்தவரான ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தையும் இந்த குழந்தைகள் அறக்கட்டளைக்கு அவர் செலவிடப்போகிறாராம். தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் இந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடுவதையே வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.
Comments
Post a Comment