7 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவுக்காக கதை தேர்வு செய்த சூர்யா!!!

15th of August 2014
சென்னை:கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார்’ என்பது தான் இன்றைய பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் இடம் பிடித்திருக்கும் முக்கிய சினிமா செய்தி சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’. ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில், மஞ்சு வாரியர் நடித்த இப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் தான் ஜோதிகா நடித்து சினிமாவில் ரீ-என்ட்ரியாக இருக்கிறார். மலையாள படத்தை இயக்கிய அதே ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் தமிழிலும் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட மஞ்சு வாரியர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரியாகி நடித்த படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’. ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயம் சம்பந்தப்பட்ட நல்ல ஒரு சமூக கருத்தையும் கூறும் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் மஞ்சு வாரியர் ரீ-என்ட்ரி ஆனதைப் போலவே, இப்படம் மூலம் தமிழில் ஜோதிகா ரீ-என்ட்ரியாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜோதிகா நடிக்க காரணமே சூர்யா தானாம்! மலையாள ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை பார்த்துள்ளார் சூர்யா! படத்தை பார்த்ததும் சூர்யா, இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸை தொடர்பு கொண்டு, ‘‘ஹவ் ஓல்டு ஆர் யூ’வின் தமிழ் ரீ-மேக்கில் ஜோதிகா நடிக்க விரும்புகிறார். உங்களால் சென்னைக்கு வரமுடியுமா? என்று கேட்டாரம்! இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் சென்னைக்கு வந்ததும் சூர்யா அவருடன் கலந்து பேசி கிட்டத்தட்ட ஒரு வார காலத்தில் எல்லாவற்றையும் முடிவு செய்து, ஒப்பந்தமும் போடப்பட்டு விட்டது! அதாவது இப்படடத்தின் தமிழ், கன்னட ரீ-மேக்கில் ஜோதிகா நடிப்பது, படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பது, படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட மற்ற மொழிகளில் தயாரிப்பதற்கான உரிமை அத்தனையையும் சூர்யாவின் 2டி நிறுவனமே பெற்றுள்ளதாம்! இந்தத் தகவல்களை ரோஷன் ஆன்ட்ரூஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ தமிழ் ரீ-மேக் படத்தின் மூலம் தமிழிலும் இயக்குனராக அறிமுகமாகவிருக்கும் ரோஷன் ஆன்ட்ரூஸ் இதுவரை 6 மலையாள படங்களை இயக்கியுள்ளார். அந்த 6 படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளது. இவர் மலையாளத்தில் இயக்கிய முதல் படம் மோகன்லால் நடித்த ‘உதயனாணு தாரம்’. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிய இந்தப் படம் தான் தமிழில் பிரகாஷ் ராஜ், தயாரித்து நடித்த ‘வெள்ளித்திரை’. ‘உதயனாணு தாரம்’ படத்தைத் தொடர்ந்து ‘நோட்புக்’, ‘இவிடம் சொர்க்கமாணு’, ‘கேசினோவா’, ‘மும்பை போலீஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிய 6-ஆவது படம் தான் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிருத்திவிராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில ஒரு படத்தை இயக்கி வரும் ரோஷன் ஆன்ட்ரூஸ் அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தான் தமிழ் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தை இயக்க இருக்கிறாராம்.

Comments