27th of August 2014
சென்னை:ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் நிரப்பி தலையில் ஊற்றி குளிக்கும் விளையாட்டு
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து பிரபலமாகி வருகிறது. உடம்பில்
ஏற்படும் நரம்பு நோய் விழிப்புணர்வு அமைப்பினர் நடத்தும் இந்த போட்டிகளில்
முதலில் பாலிவுட் நடிகைகளான சோனாக்ஷி சின்ஹா, சன்னி லியோன் உள்பட பலர்
கலந்து கொணடு, தங்களது நண்பர்களை என்னை போன்று ஐஸ் தண்ணீரில் குளிக்க
முடியுமா என்று சவாலுக்கு அழைத்தனர்.
அப்படியே பரவிய இந்த ஐஸ் குளியல் இப்போது கோலிவுட்டுக்கும் பரவிவிட்டது. சமூக ஆர்வம் கொண்டவரான ஹன்சிகா, சமீபத்தில் இந்த சேலஞ்சிங் விளையாட்டில் கலந்து கொண்டார். அதோடு, தனது நண்பர்கள் சிலரையும் அடுத்தடுத்து குளிக்க வைத்தார். மேலும் இன்னும் சில கோலிவுட் நடிகர்களுக்கும் அவர் சவால் விட்டிருக்கிறார்.

இந்த நிலையில், அஜீத்தின் 58வது படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர், அப்படத்தின் நாயகியான த்ரிஷாவுக்கு சவால் விட்டார். அதன் எதிரொலியாக அப்பட யூனிட்டினர் முன்னிலையில் ஐஸ் குளியல் போட்டிருக்கிறார் த்ரிஷா. அவரைப் பார்த்து யூனிட்டில் உள்ள மேலும் சில நடிகர்-நடிகைகளும் இந்த ஐஸ் விளையாட்டில் கலந்து கொண்டார்களாம்.
Comments
Post a Comment