3 நாளில் அஞ்சான்’ வசூல் 30 கோடி!!!

18th of August 2014
சென்னை:பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம் சூர்யாவின் ‘அஞ்சான்’. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வசூலிலும் உலகம் முழுக்க சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படம் வெளியான 3 நாட்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே 3 நாட்களில் அதிக வசூலாகியுள்ள படம் ‘அஞ்சான்’ தானாம்.

உலகம் முழுக்க ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’, சூர்யா நடித்த படங்களிலேயே ஒரு பதிய சாதனையை படைக்கும் என்கிறனர். இதனால் ‘அஞ்சான்’ படக்குழுவினரும், சூர்யாவின் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments