26th of August 2014
சென்னை:Tags சமீபத்தில் ‘லிங்கா’ படப்பிடிப்பின்போது ஷிமோகாவில் தனது 40வது வருட சினிமா பயணத்தை ‘கேக்’ வெட்டிக் கொண்டாடினார் ரஜினி. அந்த கொண்டாட்டத்தின் சந்தோஷத்தை தனது ரசிகர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ள சூப்பர்ஸ்டார் ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடலாமா என இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஆலோசித்துள்ளாராம். ஆகையால் லிங்கா தரிசனம் ரசிகர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள் ‘லிங்கா’ படப்பிடிப்புக் குழுவினர்.
தற்போது 3000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் கர்நாடகாவில் உள்ள கிராமம் ஒன்றில் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இப்படத்தில் ‘‘எனக்கு இந்து வேணாம், முஸ்லீம் வேணாம், கிறிஸ்டியன் வேணாம், நாடார், செட்டியார், முதலியார் யாரும் வேணாம்... இந்தியனா இருக்கிறவங்க மட்டும் என்கூட வாங்க’’ என பஞ்ச் டயலாக் ஒன்றும் பேசி இருக்கிறார் என யூனிட்டிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.
ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். சோனாக்ஷியின் தந்தையாக ராதாரவியும், ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாகவும், சந்தானம், கருணாகரன் ஆகியோர் காமெடியன்களாகவும், சிறப்புத் தோற்றத்தில் சுதீப்பும் நடிக்கிறார் என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்.
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ‘லிங்கா’ ரிலீஸாகவிருக்கிறது.

Comments
Post a Comment