4th of August 2014
சென்னை:இன்னும் சில நாட்களில் ஆர்.கண்ணன் தான் இயக்கிவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். விமல். ப்ரியா ஆனந்த், சூரி நடித்துள்ள இந்தப்படத்தின்
ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆடியோ ரிலீஸை வரும் ஆகஸ்ட்-29 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்த இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்க்கிறார்களாம். இந்த விழாவிற்கு திரையுலகின் முக்கிய பிரபலங்களை எல்லாம், குறிப்பாக படத்தின் டைட்டிலில் இரண்டு ‘ராஜா’க்கள் இடம்பெற்றுள்ளதால்
அந்த பெயருக்கு தொடர்புடைய பிரபலங்களை அழைத்து விழாவை வித்தியாசமாக நடத்துவது என முடிவு செய்துள்ளார்களாம்.
Comments
Post a Comment