வரும் 22ஆம் தேதி பரத்துக்கு மிக முக்கியமான நாள்!!!

20th of August 2014
சென்னை:கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சசி டைரக்‌ஷனில் பரத் நடித்த 555 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதன்பின்  ‘ஜாக்பாட்’ என்ற இந்திப்படத்திலும், மலையாளத்தில் ‘கூதரா’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்தும் நடித்தார்.
 
இதை தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு வருட இடைவெளி விட்டு பரத் நடித்துள்ள ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படம் வரும் ஆகஸ்ட்-22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘அட்டகத்தி’ நந்திதா பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவிதாலயா தயாரித்துள்ள இந்தப்படத்தை எல்.ஜி.ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
 
இதில் சித்த வைத்தியராக நடித்துள்ள பரத் காமெடியில் இறங்கி அடித்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய சாதனையாக இந்தப்படத்தில் தம்பிராமையா, இமான் அண்ணாச்சி உட்பட 22 நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த 22 நகைச்சுவை நடிகர்களும் ஒன்றாக இடம்பெறும் திருமண நிகழ்ச்சி படத்தின் ஹைலைட் காமெடியாக இருக்குமாம். அதனால் ஆகஸ்ட் மாத ராசி பரத்திற்கு மீண்டும் ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

Comments