200 நாட்களை தொட்டது ராஜமௌலியின் படம்!!!

11th of August 2014
சென்னை:‘ஈகா’.. அதாங்க ‘நான் ஈ’ படத்துக்கு அப்புறமா இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியோட படம் எதுவும் ரிலீசாகலையே.. அப்படின்னா நமக்கு தெரியாம எந்தப்படம் 200 நாள் ஓடியிருக்கும் என்கிற குழப்பத்துக்கெல்லாம் ஆளாகவேண்டாம். விஷயம் தற்போது அவர் இயக்கிவரும் ‘பாஹூபலி’யை பற்றியது.

‘மகதீரா’, ‘நான் ஈ’ என முந்தைய ஹிட்டுக்களின் வெற்றிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது தெலுங்கில் ‘பாஹூபலி’ என்ற சரித்திரப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். நேற்றோடு இந்தப்படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களை தொட்டுவிட்டது. இன்னும் சில நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு தொடரும் என்று தெரிகிறது. இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் ராஜமௌலி
 
இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபாஸுக்கு பாஹுபலி, சிவுடு என இரண்டு வேடங்கள். பாஹுபலி கேரக்டருக்கு ஜோடியாகத்தான் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.. சத்யராஜ், சுதீப் இருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள்.

Comments