எனது 17 படங்களும் யு சான்றிதழ் படங்கள் தான் - இயக்குநர் வி.சேகர் பெருமிதம்!!!

1st of August 2014
சென்னை:ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசை பின்னணி, காதல், காமெடி என ஒவ்வொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர்!

அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குநர் வி.சேகர்.

தற்போது தனது மகனை ஹீரோவாக வைத்து ‘சரவண பொய்கை’ என்ற படத்தை இயக்கி வரும் வி.சேகர், படம் குறித்து நம்மிடம் பேசுகையில், “நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம், குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம், எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம்.


ஓவ்வொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என்படங்களை வெற்றி பெற செய்தார்கள்.

இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதை தான் ’சரவண பொய்கை’. இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம்.

இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே ’யு’ சர்டிபிகேட் படங்கள் தான்.
’சரவண பொய்கை’ படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல்  யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.

கார்ல்மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது.

விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.” என்று கூறினார்.

Comments