அஞ்சான்' சென்சார் பிரச்சனை முடிந்தது - 15ஆம் தேதி படம் ரிலீஸ்!!!

8th of August 2014
சென்னை:லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் 'அஞ்சான்'. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடுவோம் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் படத்தை தணிக்கை செய்யும் பொது, படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்பட்டது. ஆனால், பெரிய பட்ஜெட் படம் என்பதால், எப்படியாவது படக்குழுவினர் யு சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், தற்பொது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள 'அஞ்சான்' படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றதழ் வழங்க்கியுள்ளனர். படமும் சொன்னபடி, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
 

Comments