31st of July 2014
சென்னை:ஆகஸ்ட்-15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளிவர தயாராகி வருகிறது அஞ்சான்’. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படம் இது. லிங்குசாமி இயக்கும் முதல் டபுள் ஆக்ஷன் படமும் கூட..

அவ்வளவு ஏன்.. சூர்யா, லிங்குசாமி கூட்டணியில் உருவாகும் படம் என்பது ஒன்றே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சமந்தா, சந்தானம், சித்ரங்கதா சிங் என கலர்ஃபுல் நட்சத்திர கூட்டணி வேறு.
இன்னொரு சிறப்பு அம்சமாக யுவனின் இசையில் சூர்யாவும் பாடல் ஒன்றை முதன்முதலாக பாடியிருக்கிறார். இதுதவிர ‘அஞ்சான்’ வீடியோ கேம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி குழந்தைகளை கவர்ந்திருக்கிறார் சூர்யா.
இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளனர். இந்தப்படம் மும்பையில் சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment