பார்த்திபன் படத்திற்கு ‘U’ சான்றிதழ்!!!

14th of July 2014
சென்னை:கதையே இல்லாமல் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என ஒரு படத்தையே வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார் பார்த்திபன். ஒருபக்கம் சந்தோஷ் விஜய்ராம், லல்லு, தினேஷ், அகிலாகிஷோர், சாஹித்யா முற்றிலும் புதுமுகங்கள்..
 
இன்னொரு பக்கம் விஷால், ஆர்யா, விஜய்சேதுபதி, அமலாபால் என முன்னணி நட்சத்திரங்கள் ஆகியோரை வைத்து இரண்டு அடுக்குகளாக படத்தின் திரைக்கதையை பின்னியிருக்கிறாராம் பார்த்திபன். இதில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப்படத்திற்கு விஜய் ஆண்டனி, ஷரத், தமன், அல்போன்ஸ் ஜோசப், சத்யா என ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்களில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு இசையமைத்த சத்யா தான் இந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.
 
சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகார்கள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Comments