Manal Naharam Audio Launch Photos!!! மணல் நகரத்தில் தன் ‘மன’ நகரம் கண்ட டி.ராஜேந்தர்!!!

16th of July 2014
சென்னை:Tags : Manal Naharam Audio Release Gallery, Manal Naharam Songs Launch Event Stills, Manal Naharam Movie Audio Release Photos, Manal Naharam Audio CD Launch Pictures, Manal Naharam Audio Release Function images
 
டி.ராஜேந்தர் இயக்கிய ‘ஒருதலைராகம்’ படத்தில் ஹீரோவாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தன்னுடன் ஒருதலை ராகம் படத்தில் நடித்த படக்குழுவினரை அழைத்து வந்து, நம்மை 35 வருடங்களுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குனர் சங்கர்.ஹைதராபாத்தில் இருந்து ஒருதலை ராகம் பட கதாநாயகி ரூபா, திருவனந்தபுரத்தில் இருந்து அதில் தும்பு கேரக்டரில் நடித்திருந்த கைலாஷ் மேலும் நடிகர் தியாகு, ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகர் இவர்களுடன் இயக்குனர் டி.ராஜேந்தரும் சேர்ந்து இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

டி.ராஜேந்தருக்கு தன் பழைய நண்பர்களை பார்த்ததும் உற்சாகம் கரைபுரண்டது. இந்த விழாவில் பேசிய அவர் “இது மணல் நகரம் அல்ல.. என் ‘மன’ நகரம் என்று பேசியதோடு ஒருதலை ராகம் படத்தின் சுவையான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.
 
பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது ‘மணல் நகரம்’. இந்தப்படத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கென்று இந்தியாவிலிருந்து படத்தின் நாயகன் ப்ரஜின், நாயகி தனிஷ்கா, கௌதம் என மூவர் மட்டுமே சென்றுள்ளனர். துபாயில் 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முழுப்படத்தையும் எடுத்து முடித்து உள்ளனர்.



























Comments