8th of July 2014
சென்னை:Tags : Lyricist Vairamuthu Media Meet Stills, Lyricist Vairamuthu Press Meet Gallery Pics, Lyricist Vairamuthu Press Meet images, Lyricist Vairamuthu Meet Media Peoples Pictures, Lyricist Vairamuthu Press Meet Event Photos.
கலை இலக்கியக் கருத்தரங்கிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறார். மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய துணை அமைச்சர் டத்தோ சரவணன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசி விமலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.
மாலை 4 மணிக்கு உலகத் தமிழர் வாழ்த்தரங்கம் நிகழ்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை தாங்குகிறார். அமெரிக்கா பால்பாண்டியன், சிங்கப்பூர் முஸ்தபா, நெதர்லாந்து பாஸ்கரன் கந்தையா, லண்டன் வீரா, சுவிட்சர்லாந்து சதீஷ், மலேசியா பெ.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மாலை 5 மணிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த உரையரங்கம் நிகழ்கிறது.
தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையேற்கிறார்.கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்து கம்பம் பெ.செல்வேந்திரன், கருவாச்சி காவியம் குறித்து முனைவர் பர்வீன் சுல்தானா , மூன்றாம் உலகப் போர் குறித்து த.ஸ்டாலின் குணசேகரன், ஆயிரம் பாடல்கள் குறித்து மரபின்மைந்தன் முத்தையா ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். விழாவில் "வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் ' என்னும் தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பல்கலைக்கழகங்களின் 60 ஆய்வேடுகள் தொகுதி வெளியிடப்படுகிறது. ஓ.ஆறுமுகசாமி வெளியிட ம.கிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். டாக்டர் தே.ஞானசேகரன் தொகுத்துள்ள இந்நூல்களை காவ்யா சண்முகசுந்தரம் பதிப்பித்துள்ளார்.
கவிஞர்கள் திருநாள் விருது கவிஞர் கல்யாண்ஜிக்கு வழங்கப்படுகிறது.
மாலை 7 மணிக்கு நான்கு தலைமுறை இயக்குநர்களின் வாழ்த்தரங்கம் நிகழ்கிறது.
இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார்.
முன்னதாக ஜூலை 12ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் "தமிழ்நடை"ப் பேரணி நிகழ்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாய் ஒரு பாடமாக்கக் கோரியும்,தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்கக் கோரியும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டியும் நிகழும் இந்தப் பேரணியில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். காலை 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தொடங்கும் இந்தப் பேரணி வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைகிறது
ஜூலை 12ஆம்நாள் மாலை கோவையில் பொன்னேகவுண்டன் புதூர் கிராமத்தில் ஓராண்டுக்குள் 6000 மரக்கன்றுகள் நட்டு "வைரவனம்' உருவாக்கும் திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்கிறது. இதனை வெற்றித்தமிழர் பேரவையுடன் இணைந்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம், பொன்னே கவுண்டன்புதூர் கிராமப் பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவில் ’சிறுதுளி’ மற்றும் ’ராக்’ அமைப்பினர் ஊராட்சித் துணைத்தலைவர் திரு.சத்தியமூர்த்தி, ராக் அமைப்பாளர் திரு.ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர். சுழற்சங்கங்கள் சார்பில் இதற்கான சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வையொட்டி 60 பள்ளிகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் பரிசளிக்கப்படுகின்றன. தமிழகமெங்கும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் சார்ந்த இலக்கியப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு 60,000 ரூபாய் அளவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 60 தமிழார்வலர்கள் குருதிக்கொடை வழங்குகின்றனர்.
இந்த விழாக்குழுவிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நா.மகாலிங்கம் தலைவராக உள்ளார். செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா, பொருளாளர் கோவை ரமேஷ். அமைப்புக் குழுவினர் முருகன், அ.மாரியப்பன், வி.பி.குமார், தஞ்சை இரா.செழியன். தமிழ்நடைப் பொறுப்பாளர் நா.வெங்கடேஷ். இவர்களோடு தமிழகம் முழுவதும் உள்ள வெற்றித்தமிழர் பேரவை அமைப்பாளர்களும் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா
ஜூலை 13, ஞாயிற்றுக் கிழமை கோவை கொடீசியா வளாகம் அரங்கில் நிகழ்கிறது.
இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா மற்றும்
பத்மபூஷண் விருதுக்கான பாராட்டு விழாவும் நிகழ்கிறது.காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.

Comments
Post a Comment