30th of July 2014
சென்னை:Tags : Laddukkulla Boondhi Boondhi Media Meet Stills, Laddukkulla Boondhi Boondhi Press Meet Gallery Pics, Laddukkulla Boondhi Boondhi Press Meet images, Laddukkulla Boondhi Boondhi Team Meet Media Peoples Pictures, Laddukkulla Boondhi Boondhi Press Meet Event Photos..
வருடத்திற்கு 200 படம் வெளிவருவதால் எந்த வகையிலாவது வித்தியாசமாக
படம் எடுத்து மற்றவர்களை கவர நினைக்கிறார்கள், அதற்காக வித்தியாசமாகவும்
யோசிக்கிறர்கள். விபரீதமாகவும் யோசிக்கிறார்கள், அந்த வரிசையில் வருகிறது
லட்டுக்குள்ள பூந்தி பூந்தி.
அதாவது, இந்த படத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களாகவும். ஆண்கள் அனைவரும் பெண்களாகவும் நடிக்கிறார்கள், கிரண்மை என்ற பெண் கதையின் நாயகன். ஜூன்ஸ் என்ற ஆண் நாயகி, இவர்கள் தவிர நடித்திருக்கும் அனைவருமே பால் மாறி நடித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த விபரீத முயற்சி என்பதற்கு இயக்குனர் ஜூன்ஸ் தரும் விளக்கம் இதுதான்.... லட்டு உலகம் என்றால் அதற்குள் இருக்கும் பூந்திதான் ஆண்களும் பெண்களும், பல பூந்திகள் சேர்ந்துதான் லட்டு. அது மாதிரி ஆணும். பெண்ணும் சேர்ந்தால்தான் உலகம். இந்த தத்துவத்தை மையமாக வச்சுதான் படம்.
உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரே நாளில் பெண்ணாகவும். பெண்கள் எல்லாம் ஆணாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன், படத்தை எடுத்தேன். பெண்களும். ஆண்களும் தோற்றத்தில் அப்படியேதான் இருப்பார்கள், அவர்களின் குணங்களும். செயல்பாடுகளும் மாறி இருக்கும், உலக சினிமா வரலாற்றிலேயே இரண்டரை மணி நேர படம் முழுவதும் ஆண் பெண்ணாகவும். பெண் ஆணாவும் நடிக்கிற படம் இதுதான். என்கிறார் ஜூன்ஸ்.
Comments
Post a Comment