Kamal Haasan's Untitled Movie Production No 1 Pooja Stills!!! பூஜையுடன் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை ஆரம்பித்தார் கமல்!!!

19th of July 2014
சென்னை:Tags : Kamal Haasan's Untitled Movie Production No 1 Photos, Kamal Haasan's Untitled Movie Production No 1 Gallery, Kamal Haasan's Untitled Movie Production No 1 Pictures, Kamal Haasan's Untitled Movie Production No 1 Event images, Kamal Haasan's Untitled Movie Launch Function Stills
 
கடந்த வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிய வரலாறைப் பற்றி சொன்னால் அது பழைய விஷயம் தான்.. இப்போது லேட்டஸ்ட் விஷயம் கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே இந்தப்படத்தின் ரீமேக் வெளியாகி சூப்பர்ஹிட்டாகி உள்ளது.

தென்னிந்தியாவில் மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் மூவரும் திரிஷ்யத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்துவிட்டார்கள். இனி பாக்கி இருப்பது கமல் மட்டும் தான் என இரண்டு தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்ட அதே நாளில் தான், நம் ஆதங்கத்தை டெலிபதியில் உணர்ந்துகொண்டவர் போல ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கிர்காக டக்கென பூஜை போட்டுவிட்டார் கமல்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ஸ்ரீப்ரியா மற்றும் மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் இருவரும் தயாரிக்க, படத்திற்கு கமலின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிப்போந ஜிப்ரான் தான் இசையமைக்கிறார். பாடல்களை முத்துக்குமார் எழுதுகிறார். இந்தப்படத்தில் வசனம் எழுதுவதன் மூலம் கமலுடன் சேர்ந்து இலக்கிய கூட்டணி அமைக்கிறார் எழுத்தாளாரும் வசனகர்த்தாவுமான ஜெயமோகன்.

தெலுங்கில் ஸ்ரீப்ரியாவும் கன்னடத்தில் பி.வாசுவும் த்ரிஷ்யம் ரீமேக்கை இயக்கினாலும் தமிழில் அந்த ரிஸ்க்கை எடுக்க கமல் விரும்பவில்லை. அதனால் மலையாளத்தில் ஒரிஜினலை இயக்கிய ஜித்து ஜோசப்பே தமிழிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.








  




































Comments