Enna Pidichirukka Audio Launch Photos!!! ஹீரோயின் கூடவே காதலனும் வந்ததால் டென்ஷனான வில்லன்!!!

8th of July 2014
சென்னை:Tags : Enna Pidichirukka Audio Release Gallery, Enna Pidichirukka Songs Launch Event Stills, Enna Pidichirukka Movie Audio Release Photos, Enna Pidichirukka Audio CD Launch Pictures, Enna Pidichirukka Audio Release Function images

அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகனாக நடிக்கும் ‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஸ்ரீவித்யா கலை என்னும் பெண் இசை அமைப்பாளர் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சுப்புராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ரவி மரியாவிடம் இணை இயக்குனராக வேலைபார்த்தவர்.
இந்தப்படத்தில் ரவி மரியா ‘வெயில்’ படத்தில் நடித்தது போல மீண்டும் டெர்ரர் வில்லனாக நடித்திருத்திருக்கிறார்.

இந்த விழாவில் ரவி மரியா பேசும்போது, “இந்தப்படத்தின் கதாநாயகன் கெவின் ஹீரோயினுடன் நெருங்கி நடிக்கும் காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் டென்ஷனுடன் இருந்தமாதிரி தெரிந்தது என கலை இயக்குனர் ஜி.கே குறிப்பிட்டார். அதற்கு காரணம் இருக்கிறது. கதாநாயகியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் காட்சியில் எல்லாம் அவரின் ஒரிஜினல் காதலன் எதிரே நின்றால் டென்ஷன் வராதா பின்னே..?

பொதுவாக நான் வில்லனாக நடித்தாலும் படப்பிடிப்பின்போது கதாநாயகியிடமும் இரண்டொரு வார்த்தைகள் ஜாலியாக பேசுவதுண்டு. ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகியின் காதலன் ஆஜானுபாகு தோற்றத்துடன் கூடவே நிற்கும்போது அந்தப்பக்கம் போகவே வழியில்லை.. கிட்டத்தட்ட நான் நடித்த 25 நாட்களும் ஹீரோவுக்கு மட்டுமல்ல.. எனக்கும் கொஞ்சம் டென்ஷனுடன் தான் நகர்ந்தது” என கலகலப்பாக பேசி கைதட்டலை அள்ளினார் ரவிமரியா. 
 
இந்தவிழாவில் கலைப்புலி தாணு, சமுத்திரகனி, கங்கை அமரன், இசையமைப்பாளர் தேவா, அனுராதா, டிஸ்கோசாந்தி, நிரோஷா உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

Comments