குத்தாட்டம் போட விரும்பிய இயக்குனர் சிகரம்!!!

5th of July 2014
சென்னை:இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’.. பரத், நந்திதா நடித்துள்ள இந்தப்படத்தில் சைமன் என்னும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது
 
இந்த விழாவில் பேசிய பாலசந்தர், “இசையமைப்பாளர் சைமன், பாடல்களில் அதிரவைதிருக்கிறார்.. பொதுவாக எனக்கு குத்துப்பாடல்களை அவ்வளவாக பிடிக்காது.. ஆனாலும் இந்தப்படத்தின் பாடல்கள் ஆடவைக்கும் விதமாக இருக்கிறது..
 
வ்வளவு ஏன்.. எழுந்து குத்தாட்டம் ஆடலாமா என்று எனக்கே தோன்றியது.. ஒரு குத்துப்பாட்டு  என்றால் பார்ப்பவர்களை எழுந்து ஆட வைக்க வேண்டும்” என சைமனை பாராட்டித் தள்ளிவிட்டார். .

Comments