சேரன் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏன்..?!!!

6th of July 2014
சென்னை:ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சர்வானந்த், சினேகா, நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகிவரும் இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘ஏமிட்டோ ஏ மாயா’ என்று பெயர் வைத்திருக்கிறார் சேரன்.
 
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளியாகாத நிலையில் வெளியாவதில் தாமதம் ஏன் என்பதை பற்றி சேரனே விளக்கம் கூறியுள்ளார்.
“இந்தப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏன் என பலர் என்னிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். படம் தயாராகிவிட்டது.

அற்புதமாக வந்திருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் படத்தை ரிலீஸ் செய்து அது நன்றாக இருக்கிறது என்ற seythi மக்களை சென்றடைவதற்குள் அடுத்த படத்துக்காக, ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கி விடுவார்கள்.. கடைசியில் பணம் போச்சே.. படம் போச்சே என புலம்பிக்கொண்டு உட்கார நான் விரும்பவில்லை. இந்தப்படம் கடைக்கோடியில் இருக்கும் ரசிகனுக்கும் சென்று சேரும் விதமாக ஒரு புதுமையான முயற்சியை கடந்த ஆறுமாதமாக உருவாக்கி வருகிறேன்.
 
என் படத்துக்கு மட்டுமல்ல, மற்ற நல்ல படங்களுக்கும் இது பொருந்தும்.. அதைப்பற்றி வரும் ஜூலை-14ஆம் தேதி பத்திரிகையாளர்களா முன்னிலையில் விளக்க இருக்கிறேன்.. இதுதான் என்படம் தாமதமாக காரணம்” என கூறியுள்ளார்.
 

Comments