1st of July 2014
சென்னை:மலையாளத்தில் சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள படம் ’பெங்களூர் டேஸ்’. ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் போலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார் என மலையாளத்தின் இளம் முன்னணி டீம் கை கோர்த்து நடித்துள்ள இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ஏற்கெனவே ஹிட்டான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்திற்கான கதையை எழுதியவர் இவர் தான். இன்றைய இளம் தலைமுறையினரின் கதையை, படு யதார்த்தமாக சொல்லியிருக்கும் ‘பெங்களூர் டேஸ்’ படம், இளைஞர் வட்டாரத்தினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இன்னமும் தியேட்டர்களில் நல்ல வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் இப்படத்தை
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்க பலத்த போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை ரீ-மேக் செய்து தயாரிக்கும் உரிமையை பிரபல ‘பிவிபி சினிமா’ நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், மலையாளத்தில் நஸ்ரியா நடித்த கேரக்டரில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
Comments
Post a Comment