நட்புக்காக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பாடிய பாடல்!!!

18th of July 2014
சென்னை:கோணக்கொண்டக்காரி’ என ஜீ.வி.பிரகாஷ் தனியாக பாடினாலும், இல்லை தனது காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து ‘யாரோ இவன்’, ‘யார் இந்த சாலையோரம்’ என டூயட் பாடினாலும் அது ஹிட் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
 
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இதேபோல ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக ‘இதயம் உன்னை தேடுதே பாடலை சைந்தவியுடன் சேர்ந்து பாடிஇருந்தார் ஜீ.வி.பிரகாஷ். தற்போது ராஜாசந்துரு என்பவர் இயக்கி நடிக்கும் ‘மது மாது சூது’ என்ற படத்தில் சி.சத்யாவின் இசையில் நட்புக்காக ஒரு பாடலை பாடியுள்ளனர் இருவரும்.
 
பா.விஜய் எழுதிய ‘சின்ட்ரெல்லா.. சின்ட்ரெல்லா’ என தொடங்கும் இந்தப்பாடல் காதல் திருமணம் புரிந்த புதுமணத்தம்பதிகள் பாடுவதாக படத்தில் அமைந்துள்ளது. அதனால் ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் இந்தபாடலை பாடியது வெகு பொருத்தமாக அமைந்து விட்டது என்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

Comments