அஜீத் பேஸ்புக் பக்கத்தில் அதிகாரபூர்வ குறியீடை திரும்ப பெற்ற நிறுவனம்: காரணம் என்ன?!!!

அஜீத் பேஸ்புக் பக்கத்தில் அதிகாரபூர்வ குறியீடை திரும்ப பெற்ற நிறுவனம்: காரணம் என்ன?
4th of July 2014
சென்னை:நேற்று அஜீத் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.ஆம் அஜீத் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார் என்றும் அதுஅதிகாரப்பூர்வமானது என்று அறிவித்தது பேஸ்புக் நிறுவனம். ஆனால் இன்றோ அதனை திரும்ப பெற்றது நிறுவனம்.  என்ன காரணத்திற்காக அஜீத் பக்கத்திலிருந்து வெரிபிகேசனை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது என்று வந்த தகவலில்படி, அஜீத் பக்கத்தை அஜீத் ரசிகர்கள் பராமரிக்கிறார்கள் என்பதால் இருக்கலாம் என்கிறார்கள்.
 
 அப்படியானால் விஜய் பக்கத்தை விஜய் ரசிகர்கள்தானே நிர்வகிக்கிரார்கள் என்று கூறலாம்.ஆனால் விஜய் அதற்கு அனுமதி அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அஜீத் ரசிகர் மன்றத்தையே விரும்பாதவர்.அப்படி இருக்க அவர் எப்படி அனுமதி அளித்திருப்பார் என்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்திருக்கும் என்றும் பேசப்படுகிறது.
 
ஆனால் இன்னொரு செய்தியும் உலாவுகிறது. அது என்னவென்றால் இந்த சம்பவத்திற்கு விஜய் ரசிகர்களின் பங்களிப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது.  அடுத்த சூப்பர்ஸ்டார் விவகாரத்தில் அஜீத் ரசிகர்களின் கருத்தால் மனம் கொதித்திருந்த விஜய் ரசிகர்கள், அஜீத் பக்கத்தை அஜீத் நேரடியாக அனுமதி அளிக்கவில்லை அதனால் வெரிபிகேசன் டிக் மார்க்கை  நீக்க பேஸ்புக் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்திருந்தனராம்.
 
அதனால் பேஸ்புக் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
என்ன நடந்ததோ ஆனால் கிட்டத்தட்ட 15 லட்சம் லைக்குகளை பெற்று மின்னல் வேகத்தில் சென்ற அஜீத் பேஸ் புக்கத்தில் இந்த நிறுவனத்தின் நடவடிக்கையால் அஜீத் ரசிகர்கள் மிகவும் மனம் வருத்தம் அடைந்துள்ளனர்.

Comments