விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படப்பிடிப்பிலிருந்து பட இயக்குநர் ஓட்டம்!!!

1st of July 2014
சென்னை:விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் - சகாப்தம். இந்தப் படத்தை சந்தோஷ்குமார் ராஜன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வந்தார். இவர் வல்லரசு மகாராஜன் உட்பட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்.மகாராஜன் உட்பட சந்தோஷ்குமார் ராஜன் பணிபுரிந்த அத்தனை இயக்குநர்களுமே அவரை பெரிதும் மதித்தனர்.
 
காரணம் விஷயமுள்ள உதவியாளராக இருந்தார். சந்தோஷ்குமார் ராஜனின் இந்த திறமைதான் சகாப்தம் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு தேடிக்கொடுத்தது.
 
சகாப்தம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு வரை புதுமுக இயக்குநர் என்று எண்ணாமல் சந்தோஷ்குமார் ராஜனுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வந்திருக்கிறார் விஜய்காந்த். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டதாம். பொள்ளாச்சியில் முதல் ஷெட்யூல் தொடங்கியபோது, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு மனைவி சகிதம் வந்து உட்கார்ந்திருக்கிறார் விஜயகாந்த்.இருவரும் மாறிமாறி கருத்துக்களையும் ஐடியாக்களையும் சொல்லி இயக்குநர் சந்தோஷ்குமார் ராஜனை வேலை செய்யவிடவில்லையாம்.
 
உச்சகட்டமாக விஜயகாந்தே டைரக்டராக மாறி மகனை நடிக்க வைத்திருக்கிறார். தன்னை டம்மியாக்கிவிட்டு தானே இயக்குநராகி விஜயகாந்த் செய்வதை பார்த்துக்கொண்டு சும்மா நிற்க சந்தோஷ்குமார் ராஜனுக்கு விருப்பமில்லை.எனவே படப்பிடிப்பிலிருந்து கிளம்பி போய்விட்டாராம் இயக்குநர். இயக்குநர் எஸ் ஆனதால் இப்போது சுரேந்தர் என்பவர் அப்படத்தை இயக்க உள்ளாராம்.

Comments