விஜய் டிவி மா.கா.பா.ஆனந்த்துக்கு ஏற்பட்ட சிக்கல்!!!

23rd of July 2014
சென்னை:மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’, ஆகிய படங்களில், இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள விஜயபாஸ்கர்,. முதன் முறையாக இயக்குனராக ‘அட்டி’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் கதாநாயகனாக மா.கா.பா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா, மற்றும் முன்னனி கதாபாத்திரத்தில் ராம்கி நடிக்கின்றார்.
 
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நாடோடிகள்’ ஆகிய வெற்றி படங்களின் இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு தான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் அவனது நண்பர்கள் பற்றிய கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. .
 
சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை சாதூர்யமாக எப்படி கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கிறார்களாம்.

Comments