3rd of July 2014
சென்னை:முத்து, படையப்பா” படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘லிங்கா’. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை:முத்து, படையப்பா” படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘லிங்கா’. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் என்பதாலும், வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினியுடன் முதன் முதலாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கிறார்கள். 70 சதவீதம் வரை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். தமிழ் சினிமாவில் ‘பன்ச்’ வசனத்தை ஆரம்பித்து வைத்து அதற்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ரஜினிகாந்த்தான்.
ஆனால், இந்தப் படத்தில் ‘பன்ச்’ வசனம் என தனியாக எதுவுமில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
லிங்கா’ படத்தில் பன்ச் வசனம் உண்டு. ஆனால், அது பன்ச் வசனம் என்று தெரியாத அளவிற்குத்தான் இருக்கும். அப்படிப்பட்ட வசனத்தை ரஜினிகாந்த் ஒரு முறைக்கு மேல் பேசமாட்டார். இதற்கு முன்னர் பன்ச் வசனத்தை படத்தில் அடிக்கடி ரஜினி பேசிக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் ரஜினி எது பேசினாலும் அது பன்ச் வசனம் ஆகிவிடுகிறது,” என்கிறார்.
லிங்கா’ படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment