தந்தையின் படத்திற்காக பாடிய மகன்!!!

23rd of July 2014
சென்னை:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டி நடித்த ‘மங்கிலிஷ்’ என்ற படம் ரிலீசாக இருக்கிறது.  படத்தில் மீனவ கிராமம் ஒன்றில் மாலிக்பாய் என்கிற மீன் வியாபார தரகராக
 
நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படத்திற்கான புரோமோ பாடலை பாடியுள்ளவர் வேறு யாருமல்ல.. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தான்.
 
இந்தப்பாடலுக்கு இசையமைத்த கோபிசுந்தருக்கும் படத்தின் இயக்குனர் சலாம் பப்புவுக்கும் வாய்ப்பு தந்ததற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார் துல்கர்.

தனது தந்தை படம் என்பதற்காகத்தான் பாடல் பாடியிருக்கிறாரோ என நினைக்கவேண்டாம்.. இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘கூதரா’ என்ற படத்தின் ட்ரெய்லருக்கும் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் துல்கர்..

Comments