அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல்: குஷ்பூ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில்: அஜீத்.!!!

1st of July 2014
சென்னை:தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர்களில் யார் அஜீத்தின் அடுத்தப்பட இயக்குநர் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில்.
 
அஜீத்தின் அடுத்த படம் பற்றி புதிய தகவல் ஒன்று அடிபடுகிறது. குஷ்பூ தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அஜீத். அதுவே அவரது அடுத்தப்படம் என்கிறார்கள்.
 
அஜீத்திடம் குஷ்பூ கால்ஷீட் கேட்டதாகவும், அஜீத் அவரை தட்டிக்கழித்துவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது. இந்நிலையில் அஜீத்தே குஷ்பூவை அழைத்து கால்ஷீட் தருவதாக சொல்லியிருக்கிறாராம். இதனால் அஜீத்தின் பெருந்தன்மையை தன் சகாக்களிடம் சொல்லி பூரித்துப்போகிறாராம் குஷ்பூ.

Comments