ஹேப்பி பர்த்டே விஜயலட்சுமி!!!

1st of July 2014
சென்னை:சென்னை–28’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அடையாளம் பெற்றவர்களில் நடிகை விஜயலட்சுமியும் ஒருவர். இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற முத்திரையை விட, சென்னை-28 படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.
 
தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கற்றது களவு’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
 
தற்போது இவரது நடிப்ப்பில் ‘ரெண்டாவது படம்’ வெளியாக தயாராக உள்ளது. இதுதவிர ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘வெண்ணிலா வீடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் விஜயலட்சுமிக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments