2nd of July 2014சென்னை:கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறார்.இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும்
நடிக்கின்றனர். அனுஷ்கா முதன் முறையாக இதில் சொந்தக் குரலில் பேச
இருக்கிறார்.
அருண்விஜய், தன்ஷிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ராஜசிம்மன் என்ற
நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். இவர் முத்தையா இயக்கத்தில்
சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் அஜித் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஆனால், நவம்பர் மாதத்தில்தான் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார் அஜீத். அதோடு அந்த கேரக்டர்களையே ஹீரோ, வில்லனாகவும் கதை பண்ணியிருந்தார். அதையடுத்து தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்திலும் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார்.
அதனால், க்ரைம் சப்ஜெக்ட்டில் தயாராகும் இந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லன் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று அப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே வில்லனை தேடி வந்தார் கெளதம்மேனன். அந்த வகையில் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய வில்லன் நடிகர்களையும் அழைத்து போட்டோ செஷன் நடத்தினார். ஆனால், கொலை செய்து விட்டு தலைமறைவாகும் அந்த கேரக்டருக்கு ஏற்ற வில்லன்கள் அவர் எதிர்பார்த்தபடி செட்டாகவில்லை.
இந்த நிலையில், முதலில் பிரபல வில்லன்களாக தேடிக்கொண்டிருந்தவர்கள், பின்னர் வளர்ந்து வரும் நடிகர்களின் போட்டோக்களை வரவைத்து தேடிக்கொண்டிருந்தபோது, சசிகுமார் நடித்த குட்டிப்புலியில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினாராம். இதனால் இப்போது அவரை கமிட் பண்ணி வில்லனுடன அஜீத் மோதும் காட்சிகளை துரிதமாக படமாக்கி வருகிறார் கெளதம்மேனன்.
Comments
Post a Comment