சித்ரா லட்சுமணுக்கு கமல் படத்தில் வாய்ப்பு!!!

18th of July 2014
சென்னை:இன்று தமிழ்சினிமாவில் மனோபாலா, இளவரசு ஆகியோர் வரிசையில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராகி விட்டவர் சித்ரா லட்சுமண். இவர் முன்னாள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பாஸ்’ என்கிற பாஸ்கரன் மூலம் இன்றைய இளைஞர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட இவரைத்தேடி இப்போது கமல் நடிக்கும் ‘உத்தம் வில்லன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
 
இதற்கு முன்னாள் ஒரு சின்ன பிளாஸ்பேக்.. சித்ரா லட்சுமண் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டங்களில் கமலுக்கு பி.ஆர்.ஓவாக செயல்பட்டவர். பின்னர் கமலை வைத்து ‘சூரசம்ஹாரம்’ படத்தை தயாரித்து அவரே இயக்கவும் செய்தார்.
 
அந்த வகையில் கமலிடம் நீண்ட கால நட்பு கொண்டிருக்கும் சித்ரா லட்சுமணுக்கு உரிய நேரம் வந்திருப்பதால் கமலின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. என்ன ஆச்சர்யம் பாருங்கள். இந்தப்படத்தில் கூட கமலுக்கு பி.ஆர்.ஓவாக வரும் கேரக்டரில் தான் நடிக்கிறார் சித்ரா லட்சுமண்.

Comments