27th of July 2014
சென்னை:இயக்குனர் பாண்டிராஜ்க்கு இது போதாத காலம் போல. பின்ன சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்தும்கூட சிம்புவை வைத்து படம் இயக்க ஆசைப்படுவாரா? எந்த நேரத்தில் இது நம்ம ஆளு படத்தை துவங்கினாரோ இன்னும் முடிந்தபாடில்லை. பொறுத்துபார்த்த பாண்டிராஜ் இடையே
சூர்யாவிடம் ஒரு கதை சொல்ல, அந்த கதையை சூர்யாவே தயாரிக்க முன் வந்தார். போனஸாக ஒரு கெஸ்ட் ரோலில் வேறு நடிக்க சம்மதித்தாராம்.
படபூஜையும் நடந்து சில நாட்கள் சூட்டிங்கும் நடத்தினார். இருந்தாலும் இது நம்ம ஆளு படத்தை முடித்துவிட்டால் நிம்மதியாக அடுத்த வேலையை பார்க்கலாமே என்று தோன்றவே அடு விசயமாக பேச சிம்புவை பார்க்க சென்றாராம். அங்கே போனால் பாண்டிராஜூக்கு கடும் அதிர்ச்சி. ஆம் சிம்பு தனது ஹேர்ஸ்டைலை முற்றிலும் மாற்றி இருந்தாராம்.
அதனை கண்ட பாண்டிராஜ், நீங்க இப்படி ஹேர் ஸ்டை மாற்றிட்டீங்க…இப்படி இருந்தா படத்துல கண்ட்டினியூட்டி இருக்காதே? அதைவிட கொடுமை இது வளரவே இன்னும் ஒரு மாதம் மேலாகும் போலிருக்கே என்று கூறினாராம். அதற்கு வளரட்டுமே அதுக்கென்ன இப்போ? வளர்ந்த பிறகு சொல்லியனுப்புறேன் வாங்க பேசிக்கலாம்’ என்றாராம் சிம்பு.
ஆரம்பத்துலயே எல்லோரும் சொன்னாங்களே என்று தன் நிலைமையை நினைத்து இப்போது நொந்துபோயிருப்பார் பாண்டி என்பது உண்மை.

Comments
Post a Comment