1st of July 2014
சென்னை:யாருடன் காதல் என்று கேட்காதீர்கள்' என்றார் நித்யா மேனன்.‘நூற்றெண்பது', ‘மாலினி 22 பாளையங்கோட்டை' போன்ற படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவர் கூறியதாவது:
நடிகைகள் சொந்த குரலில் பாடுகிறார்கள். அதுபோல் நானும் பாடுகிறேன். ஆனால் நான் தொழில் ரீதியான பாடகி கிடையாது. ரசிகர்கள் என்னை பாடவேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் விரும்பும்வரை பாடுவேன். என் விருப்பம், ரசிகர்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் டைரக்டர் அழைத்தால் மட்டுமே பாடுவேன். என்னைப் பொறுத்தவரை யாரிடமும் அதிகம் பேசி அரட்டை அடிக்கும் பழக்கம் கிடையாது.
தொழில் தெரிந்த நடிகர்களுடன் மட்டுமே நான் நடிக்கிறேன். நல்ல புரிதல் இருந்தால் அது படத்திலும் பிரதிபலிக்கும். ‘இந்தி படங்களில் நடிப்பீர்களா?' என்கிறார்கள். நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் அது எனக்கு பிடிக்க வேண்டும். மொழி பிரச்னை எதுவும் பார்ப்பதில்லை. பொதுவாகவே இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லை.
மிகவும் ரசனையான கதாபாத்திரம் என தோன்றினால் அதில் நடிப்பேன். இதெல்லாம் நடக்குமா? நடக்காதா? என்று தெரியாது. ‘யாரையாவது காதலிக்கி*ர்களா? அவரையே மணக்கப்போகி*ர்களா?' என்கிறார்கள். இது மிகவும் பர்சனல் விஷயம். என் திருமணம்பற்றி வெளிப்படையாக நான் பேச மாட்டேன். ஏனென்றால் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
Comments
Post a Comment