8th of July 2014
சென்னை:எஸ்.. இது பல நாட்களாகவே எதிர்பார்த்த விஷயம் தான். பலரும் இயக்குனர் பாராதிராஜாவிடம் “நீங்கள் ஏன் ஒரு திரைப்பட கல்லூரியை தொடங்க கூடாது” என அடிக்கடி கேட்ட ஒரு கேள்விதான். அப்போதெல்லாம் அதற்கு மௌனத்தையும் நழுவலான புன்னகையையும் மட்டுமே பதிலாக தந்த பாரதிராஜா இப்போது முழு மூச்சாக களத்தில் இறங்கிவிட்டார்.

உண்மைதான்.. இயக்குனர் இமயம் பாரதிராஜா, உலக தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. அரசு திரைப்பட கல்லூரி உட்பட சில தனியார் கல்லூரிகள் இருந்தாலும் பாலுமகேந்திரா ஆரம்பித்த ‘சினிமா பட்டறை’ என்கிற குருகுல கல்வி தான் பலரையும் சினிமாவுக்குள் இழுத்து வந்தது.
தற்போது அவரது மறைவுக்குப்பின் பாரதிராஜா ஆரம்பித்திருக்கும் இந்த திரைப்பட கல்லூரி இன்னும் எண்ணற்றோரை தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரும் என்பது உண்மை.
Comments
Post a Comment